செய்திகள்
தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ்

பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகையாக ரூ.68 கோடி ஒதுக்கீடு- கலெக்டர் தகவல்

Published On 2020-08-14 10:25 GMT   |   Update On 2020-08-14 10:25 GMT
சம்பா மற்றும் தாளடி நெற்பயிருக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகையாக ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2019-ம் ஆண்டு சிறப்பு பருவத்தில் சம்பா, தாளடி நெல் பயிருக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தினரால் ரூ.67 கோடியே 83 லட்சம் பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வங்கி கணக்கில் பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. பயிர்க் காப்பீடு இழப்பீடு தொடர்பான விவரங்களுக்கு அக்ரிகல்சுரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை நிறுவன மேலாளர், வேளாண்மை உதவி இயக்குனர், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

பயிர்க் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட வருவாய் கிராமம் வாரியான இழப்பீட்டு சதவீத விவரம் www.thanjavur.nic.in என்ற தஞ்சை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News