செய்திகள்
கொரோனா வைரஸ்

அம்மா கோவிட்-19 திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2020-08-14 05:26 GMT   |   Update On 2020-08-14 05:26 GMT
அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை:

தலைமைச் செயலகத்தில் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வீடியோ வாகனங்களின் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா பாதித்து வீட்டில் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ரூ.2500 செலுத்தினால் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி, இரும்பு சத்து மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

கொரோனா பாதித்த நபர் காணொலி மூலமும், வாட்ஸ் அப் மூலமும் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News