செய்திகள்
பெருஞ்சாணி அணை

பெருஞ்சாணி அணையில் தண்ணீர் திறப்பு

Published On 2020-08-13 10:04 GMT   |   Update On 2020-08-13 10:04 GMT
பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 153 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பெய்து வந்த தென்மேற்கு பருவ மழை தற்போது குறைந்துள்ளது. அதே சமயம் மேற்கு மாவட்ட பகுதிகளில் சில இடங்களிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சிற்றார் -2 அணை பகுதியில் 12 மி.மீ., பெருஞ்சாணி-4, பாலமோர்-2.6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 576 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 153 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதுபோன்று பேச்சிப்பாறை அணைக்கு 834 கனஅடி தண்ணீரும், சிற்றார்- 1 அணைக்கு 170 கனஅடியும், சிற்றார் -2 அணைக்கு 103 கனஅடியும் தண்ணீர் வந்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 627 கனஅடியும், சிற்றார்- 1 அணையில் இருந்து 100 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News