செய்திகள்
சென்னை உயர்நீதிமன்றம்

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கை தமிழில் தயாராக உள்ளது: மத்திய அரசு தகவல்

Published On 2020-08-13 07:31 GMT   |   Update On 2020-08-13 07:31 GMT
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கை தமிழில் தயாராக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கைக்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கைதான். ஆலோசனைக் கூறினால் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பிராந்திய மொழியில் மொழிப்பெயர்த்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் சங்கம் சார்பில் தமிழில மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கை தமிழில் தயாராக உள்ளது. மேல்முறையீடு இருப்பதால் அதற்காக காத்திருக்கிறோம் என்றது.

அப்போது ஆகஸ்ட் 19-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக இதை தெரிவிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News