செய்திகள்
மழை

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு

Published On 2020-08-12 01:26 GMT   |   Update On 2020-08-12 01:26 GMT
குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி இருப்பதால், தினமும் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. அதே போல நேற்று முன்தினம் இரவிலும் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது.

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பூதப்பாண்டி-1.2, சிற்றார் 1-3, களியல்-2, கன்னிமார்-4.2, குழித்துறை-4, நாகர்கோவில்-1.2, பேச்சிப்பாறை-3, பெருஞ்சாணி-5.4, புத்தன்அணை-5, சுருளோடு-4, தக்கலை-9, பாலமோர்-11.4, மாம்பழத்துறையாறு-3, ஆரல்வாய்மொழி-1, கோழிப்போர்விளை-2, அடையாமடை-4, முள்ளங்கினாவிளை-7, ஆனைகிடங்கு-3.2, முக்கடல்-2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1071 கனஅடி, பெருஞ்சாணி அணைக்கு 831 கனஅடி தண்ணீர் வந்தது. மேலும், சிற்றார்-1 அணைக்கு 167 கனஅடியும், சிற்றார்-2 அணைக்கு 94 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 5 கனஅடியும், முக்கடல் அணைக்கு 8 கனஅடியும் தண்ணீர் வந்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று முன்தினம் 425 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று அளவு கூட்டப்பட்டு வினாடிக்கு 627 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News