செய்திகள்
ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-11 09:15 GMT   |   Update On 2020-08-11 09:15 GMT
சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில குழு உறுப்பினர் கணேசன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். இதில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீடு தாக்க அறிவிப்பு 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் அந்தோணிசாமி, ஸ்டீபன், தாவீது ஆகியோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News