செய்திகள்
அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கு

எஞ்சியுள்ள அம்மோனியம் நைட்ரேட் ஓரிரு நாளில் அகற்றம்

Published On 2020-08-11 03:41 GMT   |   Update On 2020-08-11 03:41 GMT
எஞ்சியுள்ள அம்மோனியம் நைட்ரேட் 15 கண்டெய்னர்களில் ஓரிரு நாளில் சென்னையிலிருந்து பாதுகாப்பாக அகற்றப்படும் என்று வெடிப்பொருள் துறையின் துணை முதன்மை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் கூறினார்.
சென்னை:

வெடிப்பொருள் துறையின் துணை முதன்மை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் கூறியதாவது:

சென்னை மணலி கிடங்கில் இருந்து மேலும் 240 டன் அம்மோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டுள்ளது. 240 டன் அம்மோனியம் நைட்ரேட்டுடன் ஐதராபாத்துக்கு 12 கண்டெய்னர்கள் புறப்பட்டன.

ஏற்கனவே 9ந்தேதி 10 கண்டெய்னர்களில் 181.70 டன் அம்மோனியம் நைட்ரேட் கொண்டு செல்லப்பட்டது. 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டில் எஞ்சியவற்றை 3வது மற்றும் இறுதி கட்டமாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள அம்மோனியம் நைட்ரேட் 15 கண்டெய்னர்களில் ஓரிரு நாளில் சென்னையிலிருந்து பாதுகாப்பாக அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News