செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்

Published On 2020-08-09 12:33 GMT   |   Update On 2020-08-09 12:33 GMT
தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

ஊரடங்கு காரணமாக அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமுத்து என்ற ஆட்டோ ஓட்டுனர் எப்.சியை புதுப்பிக்க ஐந்து மாதங்களாக அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முயற்சித்து வந்துள்ளார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க முடியாமல் போகவே ஒருகட்டத்தில் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தி உள்ளார். தற்கொலைக்கும் முயன்றார். இந்த சம்பவம் செய்திகளில் வெளியாகின.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்துக்கு புது ஆட்டோ வாங்கிக் கொள்வதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கினார்.

அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்சி கமிஷன் மற்றும் கரப்ஷன் ஆட்சி. நான் இ-பாஸ் எடுக்காமல் தூத்துக்குடி சென்றதாக சொல்கிறார்கள். நான் இ-பாஸ் எடுக்காமல் சென்றிருந்தால் ஏன் என் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதியை சாக்லேட் பாய் என்று விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் 'சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை. என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார்., ஒரு பிளேபாய் என்று கூறினார்.
Tags:    

Similar News