செய்திகள்
போராட்டம்

உயர் அழுத்த மின் பாதை அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-08-09 12:01 GMT   |   Update On 2020-08-09 12:01 GMT
ஓமலூர் அருகே உயர் அழுத்த மின் பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஓமலூர்:

ஓமலூர் அருகே சக்கரைசெட்டிப்பட்டியில் இந்திரா நகர் காலனி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குடியிருப்பு பகுதியின் வழியாக உயர் அழுத்த மின்பாதை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர்.

அப்போது அந்த பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு தங்கள் குடியிருப்பு பகுதியின் வழியாக உயர் அழுத்த மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பொது மக்களிடம் கருப்பூர் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், வெள்ளாளப்பட்டி உதவி பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் அந்த பகுதி பொதுமக்கள் உயர் அழுத்த மின்பாதை அமைக்க ஒத்துக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து வேறு பாதையில் அமைக்க வழிகள் உள்ளதா? என மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News