செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1½ லட்சம் பேருக்கு சளி மாதிரி பரிசோதனை

Published On 2020-08-08 18:16 GMT   |   Update On 2020-08-08 18:16 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரையில் 1½ லட்சம் பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 570 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

கொரோனா சிகிச்சைக்காக 4,133 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட 2,735 காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 593 பேர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் 26 வாகனங்கள் மூலம் 50 ஆயிரத்து 842 நபர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு வகையான முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 
Tags:    

Similar News