செய்திகள்
முக ஸ்டாலின்

கொரோனாவால் எத்தனை மருத்துவர்கள் இறந்தார்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா?: மு.க. ஸ்டாலின் கேள்வி

Published On 2020-08-08 15:39 GMT   |   Update On 2020-08-08 15:39 GMT
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் 196 மருத்துவர்கள் இறந்துள்ள நிலையில், தமிழகத்தில் எத்தனை பேர் என அமைச்சர் அறிவிப்பாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்கள பணியாளர்களின் பணி மிகமிக முக்கியமானது. டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார்கள் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள்.

கொரோனா என்ற வைரஸ் அரக்கனுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களும் உயிரை பறிகொடுக்கும் துரதிருஷ்டவசமான நிலை உள்ளது. இந்தியா முழுவதும் 196 டாக்டர்கள் உயிரிழந்ததாக ஐ.எம்.ஏ. தெரிவித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் எத்தனை பேர் என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பாரா? என்று திமுக தலைவர் முக ஸ்டாலின்  கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 3-ந்தேதி 40-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதை சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில், இன்று ஐஎம்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையை உதயநிதி ஸ்டாலின் மீண்டும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News