செய்திகள்
கோப்புபடம்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 56 பேர் கைது

Published On 2020-08-07 13:44 GMT   |   Update On 2020-08-07 13:44 GMT
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 56 பேரை போலீசார் கைது செய்தனர். 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தேவையின்றி சுற்றித்திரிபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கை மீறியதாக 56 பேர் கைது செய்யப்பட்டனர். 

16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நேற்று வரை நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 12,498 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16,682 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 6,128 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 16 இடங்களில் வாகன சோதனை நடத்திய போலீசார் முககவசம் அணியாமல் வந்த 260 பேருக்கு அறிவுரைகள் வழங்கினர்.
Tags:    

Similar News