செய்திகள்
8-வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

அரூர் அருகே 8-வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

Published On 2020-08-07 13:03 GMT   |   Update On 2020-08-07 13:03 GMT
அரூர் அருகே 8-வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் 8-வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இயக்க நிர்வாகிகள் மணி, மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். திருப்பதி, பெருமாள், கருணாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

8-வழிச்சாலை திட்டத்தை பொதுமக்கள், விவசாயிகளின் அனுமதியின்றி நிறைவேற்றும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். 8-வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்தியஅரசு தொடர்ந்துள்ள மனுவை வாபஸ் பெற வேண்டும்.

8-வழிச்சாலை திட்டத்தை அச்சாரமாக கொண்டு உருவாக்கப்பட்ட ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு 2020 வரைவு திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை துண்டிக்கும் வகையில் உள்ளதால் மின் திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த போராட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Tags:    

Similar News