செய்திகள்
கோப்புபடம்

கோவில்பாளையத்தில் கொரோனா சிகிச்சைக்கு சென்றவர்கள் வீட்டில் நகை, டி.வி. திருட்டு

Published On 2020-08-07 12:09 GMT   |   Update On 2020-08-07 12:09 GMT
கோவில்பாளையத்தில் கொரோனா சிகிச்சைக்கு சென்றவர்கள் வீட்டில் நகை, டி.வி. திருட்டு போனது. இது தொடர்பாக மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிணத்துக்கடவு:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் 41 வயது மதிக்கத்தக்க ஒரு நபருக்கு கடந்த 24- ந் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 4 பேரும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை முடிந்து அவர்கள் 4 பேரும் கடந்த 29-ந் தேதி வீட்டிற்கு வநதனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 3¼ பவுன் தங்கமோதிரம், தங்ககம்மல் மற்றும் ஒரு டி.வி. ஆகியவற்றை காண வில்லை. அதை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்- இன்ஸ்பெக்டர் சம்பந்தம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டை பூட்டி விட்டு 4 பேரும் சிகிச்சைக்காக கோவை சென்ற நிலையில் நகை, டி.வி. திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News