செய்திகள்
கோப்புபடம்

புதிய கல்விக்கொள்கையை கைவிடக்கோரி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-06 15:40 GMT   |   Update On 2020-08-06 15:40 GMT
தர்மபுரி அருகே புதிய கல்விக்கொள்கையை கைவிடக்கோரி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி:

புதிய கல்வி கொள்கையை கைவிடக்கோரி தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு தலைமை தாங்கினார். மத்திய அரசு கொண்டு வரும் இந்தி, சமஸ்கிருதத்தை உள்ளடக்கிய மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தகூடாது. 

கல்வியை மேலும் வணிகமயமாக்கும் அபாயம் இருப்பதால் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தக்கூடாது. ஏழை, எளிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News