செய்திகள்
கோப்புபடம்

உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

Published On 2020-08-05 14:01 GMT   |   Update On 2020-08-05 14:01 GMT
அஞ்செட்டி, உரிகம் வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் உரிமம் இல்லாத 10 நாட்டுத்துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
தேன்கனிக்கோட்டை:

ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட உரிகம் மற்றும் அஞ்செட்டி வனச்சரக பகுதிகளில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வைத்து, வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் உரிகம் மற்றும் அஞ்செட்டி வனச்சரகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து வனத்துறையினர் வசம் ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து ஈரண்ணன் தொட்டி, உரிகம், பிலிக்கல் மற்றும் பீர்னப்பள்ளி ஆகிய கிராமங்களில் உரிமம் இன்றி பயன்படுத்தப்பட்டு வந்த 10 நாட்டுத்துப்பாக்கிகள் மாவட்ட கவுன்சிலர் பழனி, உரிகம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேவய்யா மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் காவல்துறை மற்றும் வனத்துறையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

உரிகம் மற்றும் அஞ்செட்டி வனச்சரக பகுதிகளில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மூலம் வன உயிரினங்கள் வேட்டையாடுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிக்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட வன உயிரின காப்பாளர் பிரபு கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News