செய்திகள்
அனைத்து தொழிற்சங்க கூட்டம்

மத்திய அரசை கண்டித்து 8-ந் தேதி 200 இடங்களில் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-05 10:52 GMT   |   Update On 2020-08-05 10:52 GMT
மத்திய அரசை கண்டித்து 8-ந் தேதி 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நேற்றுகாலை திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி.ஜெனரல் சங்க பொதுச்செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். சேகர்(ஏ.ஐ.டி.யு.சி.), உன்னிகிருஷ்ணன்(சி.ஐ.டி.யு.), சிதம்பரசாமி(எல்.பி.எப்.), சிவசாமி(ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி(எச்.எம்.எஸ்.), சம்பத்(எம்.எல்.எப்) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் தொழிலாளர் உரிமைகளை பறிக்கிற, மக்களின் வாழ்வாதாரங்களை நொறுக்குகிற, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விற்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், இந்தியாவை பாதுகாப்போம் என்றும் கூறி நாடு முழுவதும் வருகிற 8-ந்தேதி போராட்டம் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கி மனுக்களை ஜனாதிபதிக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News