செய்திகள்
மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

நாகர்கோவிலில் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-04 15:59 GMT   |   Update On 2020-08-04 15:59 GMT
நாகர்கோவிலில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி த.மு.மு.க. சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தொடரும் கொரோனா தொற்று அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி த.மு.மு.க. சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஜிஸ்தி முகமது தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் காதர் மைதீன் கண்டன உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் செய்யது அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உவைஸ், எஸ்.எம்.ஐ. மாநில துணை செயலாளர் சுல்பி, மாவட்ட நிர்வாகிகள் அலி அக்பர், சித்திக், நாசர் உள்ளிட்டோரும், நாகர்கோவில், தேங்காப்பட்டணம், குளச்சல், இரவிபுதூர்கடை, சாமியார்மடம், தக்கலை, திருவிதாங்கோடு, மாதவலாயம் போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News