செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் கொரோனாவுக்கு இன்று 14 பேர் உயிரிழப்பு

Published On 2020-08-03 06:32 GMT   |   Update On 2020-08-03 06:46 GMT
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,065 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2 பேரும்  உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News