செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில்

முன்பதிவு கட்டணம் ரூ.64½ கோடி திரும்ப ஒப்படைப்பு- தெற்கு ரெயில்வே தகவல்

Published On 2020-08-03 01:53 GMT   |   Update On 2020-08-03 01:53 GMT
தெற்கு ரெயில்வேயில் 12 லட்சம் பயணிகளுக்கு ரூ.64½ கோடி முன்பதிவு கட்டணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி முதல் நாடு முழுவதும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கட்டணம் பயண தேதியில் இருந்து 6 மாத காலத்துக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று ரெயில்வே வாரியம் அறிவித்தது. அதன்படி அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.

அந்தவகையில் தெற்கு ரெயில்வேயில் ஜூன் மாதம் ரூ.43.77 கோடி, ஜூலை மாதம் ரூ.20.72 கோடி என மொத்தம் ரூ.64.49 கோடி டிக்கெட் முன்பதிவு கட்டணம் 11 லட்சத்து 97 ஆயிரம் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

இதில், சென்னை கோட்டத்தில் ரூ.27.10 கோடியும், மதுரை கோட்டத்தில் ரூ.6.81 கோடியும், சேலம் கோட்டத்தில் ரூ.7.44 கோடியும், திருச்சி கோட்டத்தில் ரூ.5.13 கோடியும், திருவனந்தபுரம் கோட்டத்தில் ரூ.11.13 கோடியும், பாலக்காடு கோட்டத்தில் ரூ.6.85 கோடியும் வழங்கப்பட்டது.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News