கடத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள், கடைக்காரர்களுக்கு அபராதம்
பதிவு: ஆகஸ்ட் 01, 2020 19:37
அபராதம்
கடத்தூர்:
ஊரடங்கு உத்தரவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் போலீசார், பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் எழில்மொழி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமலும், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வியாபாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து வாகன ஓட்டிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு பேரூராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.