செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்

Published On 2020-08-01 13:51 GMT   |   Update On 2020-08-01 13:51 GMT
ஆச்சிபட்டி, ஆர். பொன்னாபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.
நெகமம்:

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஆச்சிபட்டி ஊராட்சி, ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆச்சிபட்டி ஊராட்சியில் இருந்து 7 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். ஆச்சிபட்டி ஊராட்சியில் 4பேரும், ஆர். பொன்னாபுரம் ஊராட்சியில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆச்சிபட்டி, ஆர். பொன்னாபுரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. ஆச்சிபட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என்.ரங்கநாதன் தலைமையிலும், ஆர்.பொன்னாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தலட்சுமி மணிசேகர் தலைமையிலும் அந்தந்த ஊராட்சிமன்ற துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் தீவிரமாக கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஆணையாளர் அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விவேகானந்தன் ஆகியோர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆச்சிபட்டி ஊராட்சி செயலாளர் ப.ஆறுமுகம், ஆர். பொன்னாபுரம் ஊராட்சி செயலாளர் கலைவாணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News