செய்திகள்
கமல்ஹாசன்

20 லட்சம் பேர் வருமானமின்றி தவிப்பு: வாழ்வாதாரத்தை அரசு காக்கவேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை

Published On 2020-08-01 09:30 GMT   |   Update On 2020-08-01 09:30 GMT
ஓட்டுநர்கள், புகைப்படக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை அரசு காக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு,அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது.

மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News