செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சமூக வலைத்தளங்களில் அவதூறு... மத்திய அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-07-31 06:48 GMT   |   Update On 2020-07-31 06:48 GMT
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளை தடுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை:

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் சமீபத்தில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டது இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து யூடியூன் சேனல் நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இதேபோல் பல்வேறு மத நம்பிக்கைக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவதூறுகள் பரப்பப்படுகின்றன. 

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை தடுக்கக்கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், மதரீதியான அவதூறுகளை தடுக்க தவறிய யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் மீதும், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவிற்கு மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது. 
Tags:    

Similar News