செய்திகள்
வருமான வரி

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசம்

Published On 2020-07-31 01:39 GMT   |   Update On 2020-07-31 01:39 GMT
2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

வருமானவரி கணக்கு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த, 2018-2019-ம் நிதியாண்டுக்கான, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த மார்ச் 31-ந்தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்த காலஅவகாசம் இன்று (ஜூலை 31-ந்தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது, கணக்கு தாக்கல் செய்ய வருகிற செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வருமானவரித்துறையில் 2018-2019-ம் நிதியாண்டுக்கான, கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன.

இதை கருத்தில் வைத்து, இந்த அவகாசம், செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை, மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News