செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்

Published On 2020-07-30 07:41 GMT   |   Update On 2020-07-30 07:41 GMT
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீடிக்கும் மத்திய உள்துறை அறிவித்த நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ஆகஸ்டு மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

‘மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும். ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ-பாஸ் பெற வேண்டும்.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இரவு 7 மணி வரை இயங்கலாம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் 10000 ரூபாய்க்குள் வருமானம் உள்ள கோவில்களை திறக்கலாம், ஆகஸ்ட் மாதத்திலும் பேருந்து மற்றும் ரெயில்கள் ஓடாது, அத்தியவசிய மற்றும் அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம்’ என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 
Tags:    

Similar News