செய்திகள்
யோகா பயிற்சி

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு யோகா பயிற்சி

Published On 2020-07-26 05:10 GMT   |   Update On 2020-07-26 05:10 GMT
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் அடிப்படை யோகா பயிற்சிகளை நிபுணர்கள் கற்றுக்கொடுத்தனர்.
சென்னை:

கொரோனா தடுப்பு பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, முன்கள வீரர்களாக வலம் வருபவர்கள் போலீசார். அவர்கள் கடுமையான பணிச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். போலீசார் தங்களுடைய உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்கும் வகையில் யோகா பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து புது வண்ணாரப்பேட்டையில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் காணொலிக்காட்சி மூலம் யோகா பயிற்சி நடந்தது.

இதில் வடசென்னை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் வண்ணாரப்பேட்டை சரகத்தில் உள்ள அனைத்து உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்று யோகா பயிற்சிகளை செய்தனர். மன அழுத்தத்தை போக்கும் வகையில் அடிப்படை யோகா பயிற்சிகள் போலீசாருக்கு, நிபுணர்கள் கற்றுக் கொடுத்தனர். இந்த பயிற்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
Tags:    

Similar News