செய்திகள்
ஆர்ப்பாட்டம்

மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-25 14:41 GMT   |   Update On 2020-07-25 14:41 GMT
மேலூர் யூனியனில் உள்ள 27 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்று கூடி தங்களது உரிமைகள் பறிக்கப்படுவதாக புகார் கூறி மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலூர்:

மேலூர் யூனியனில் உள்ள 27 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்று கூடி தங்களது உரிமைகள் பறிக்கப்படுவதாக புகார் கூறி மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஒவ்வொரு ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம், குடி மராமத்து பணிகள், கிராவல் மண் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதில்லை, ஒப்புதல் பெறப்படுவதில்லை, ஊராட்சிகளில் உள்ள கனிம வளங்களை எடுக்க ஊராட்சி தலைவர்களின் அனுமதியை பெற வேண்டும், ஊராட்சி தலைவர்களின் உரிமைகள் அனைத்தையும் மறுக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி தலைவர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு கவன ஈர்ப்பு செய்யும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Tags:    

Similar News