செய்திகள்
பனிமய மாதா பேராலயம்

கட்டுப்பாடுகளுடன் பனிமய மாதா ஆலயத்திருவிழா - மாவட்ட ஆட்சியர்

Published On 2020-07-23 11:53 GMT   |   Update On 2020-07-23 11:53 GMT
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழா நிகழ்ச்சி கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்
தூத்துக்குடி:

முத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம்.

ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும் திருமந்திர நகர் பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி  தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும்,  பேராலய கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குதந்தையர்கள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

மேலும் மாவட்டத்தில் 26ம் தேதி முழு முடக்கம் என்பதால் மக்கள் வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்ய கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  பேராலய விழா நிகழ்ச்சியில் அனைத்தும் காணொலி மூலமாகவும், சமூக வலைதளங்களில் வாயிலாக ஒளிபரப்பப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News