செய்திகள்
மாநில மனித உரிமை ஆணையம்

கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய ஊழியரை பணியில் சேர்க்க மறுப்பது ஏன்?- மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

Published On 2020-07-23 10:20 GMT   |   Update On 2020-07-23 10:20 GMT
கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டிய ஒப்பந்த ஊழியரை பணியில் சேர்க்க மறுப்பது ஏன் என்று மாநகராட்சி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான கட்டடத்தில் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸ் ஓட்டப்பட்டது. இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில் நடிகர் கமல்ஹாசனும் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அந்த நோட்டீஸை தவறுதலாக ஒட்டிவிட்டதாகக் கூறினர். சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்துக்குப்பிறகு நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய ஊழியர் வினோத்குமாருக்கு இதுவரை பணிவழங்கவில்லை.

மார்ச் 29ந்தேதி முதல் பணியில் சேர தன்னை அனுமதிக்கவில்லை என வினோத்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில் மாநகராட்சி ஊழியர் வினோத்குமார் புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டிய ஒப்பந்த ஊழியரை பணியில் சேர்க்க மறுப்பது ஏன்? என்று மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags:    

Similar News