செய்திகள்
விருதுநகரில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

380 இடங்களில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

Published On 2020-07-22 13:48 GMT   |   Update On 2020-07-22 13:48 GMT
விருதுநகர் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து 380 இடங்களில் தங்களது வீடுகள் முன்பு கருப்புக்கொடியுடன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர்:

தமிழகத்தில் மின்கட்டண கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் தமிழக மக்கள் அதிக தொகை மின் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை கண்டித்தும் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க கோரியும் தமிழகம் முழுவதும் தங்கள் வீடுகள் முன்பு தி.மு.க.வினர் கருப்புக் கொடியுடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தி.மு.க.வினரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனது இல்லத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தார். அவருடன் விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சாத்தூர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ், வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜகுரு, முன்னாள் யூனியன் தலைவர் சுப்பாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் தங்கள் வீடுகள் முன்பு சமூக இடைவெளியுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி உழவர்சந்தை அருகில் மாநில நிர்வாகி வனராஜா தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ், யூனியன் தலைவர் முத்துலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சித்துராஜபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி சுப்புராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்கமலநாச்சியார்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய கவுன்சிலர் சண்முகத்தாய் பாண்டீஸ்வரன் தலைமை தாங்கினார்.

ரிசர்வ்லைனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி திலிபன்மஞ்சுநாத், ஒன்றிய கவுன்சிலர்கள் நித்யபாரதி, கவிதா பிரவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகாசி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர பொறுப்பாளர் காளிராஜன் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் தங்கராஜ், பால்ராஜ், ராமமூர்த்தி, தனசேகரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று தி.மு.க. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 380 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 1400 பேர் கலந்து கொண்டனர்.

மின்சார கட்டண உயர்வை கண்டித்து மல்லாங்கிணறில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தளவாய்புரம் அருகே உள்ள முகவூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. இளைஞரணி செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

இதில் முகவூர் கிளை செயலாளர் தொந்தியப்பன், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் விருதுநகர் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் நிர்மலா கடற்கரைராஜ் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதேபோன்று சாத்தூர் நகர, ஒன்றியம் சார்பில் சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வத்திராயிருப்பு, மகாராஜபுரம், தம்பிபட்டி, வ.புதுப்பட்டி, கான்சாபுரம், கூமாபட்டி, சேதுநாராயணபுரம், மேலக்கோபாலபுரம், சுந்தரபாண்டியம், எஸ்.ராமச்சந்திரபுரத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Tags:    

Similar News