செய்திகள்
முக ஸ்டாலின்

1 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு- மு.க.ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு

Published On 2020-07-21 09:10 GMT   |   Update On 2020-07-21 09:18 GMT
ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை:

பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் மிரட்டிய சம்பவங்களில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு தொலைக்காட்சியிலும், இதழ்களிலும் செய்தியாக வெளியாகி இருந்ததாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்ந்து தன்னை தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பான தகவலை ஸ்டாலின் பேசிவருவதால் 1 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை பற்றி ஸ்டாலின் பேசுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் ஆகஸ்ட் 18-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். 
Tags:    

Similar News