செய்திகள்
தமிழக அரசு

தனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்- 75 சதவீதம் வசூலிக்க அரசு அனுமதி

Published On 2020-07-17 07:16 GMT   |   Update On 2020-07-17 07:16 GMT
தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவெடுக்கும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை:

தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்கலாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்தது. இந்த யோசனையை தமிழக அரசு ஏற்று கொண்டது. இதையடுத்து கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்கும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும் தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது மூன்று தவணைகளாக கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

பள்ளி கட்டணம் தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்றும், ஊரடங்கு காலத்தில் 25%, பள்ளிகள் திறக்கும் போது 25%, பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25% வசூலித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News