செய்திகள்
கோப்புபடம்

திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-16 14:51 GMT   |   Update On 2020-07-16 14:51 GMT
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:

திருச்செங்கோடு அருகே உள்ள தோக்கவாடி பகுதியில் விசைத்தறியில் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் தம்பிராஜா தலைமை தாங்கினார். இதில் நகர பொருளாளர் ராமசாமி, போக்குவரத்து கழக லேபர் யூனியன் பொதுச்செயலாளர் முருகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர் செங்கோட்டுவேல், நாமக்கல் மாவட்ட குழு மீனா, நகர செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வந்தனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆய்வு செய்து கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

திருச்செங்கோடு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சமூக இடைவெளியுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவேல் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, செங்கோட்டையன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News