செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் குணமடைந்தோர் எண்ணிக்கை ... மாவட்ட வாரியாக நிலவரம்

Published On 2020-07-16 13:41 GMT   |   Update On 2020-07-16 13:41 GMT
தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.
சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820லிருந்து 1,56,369 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5,106  பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2வது நாளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 44,186 பேருக்கு செய்யப்பட்டதில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 46,714 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 13வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

இன்று மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை:

    அரியலூர் - 19
    செங்கல்பட்டு - 262
    சென்னை- 1712
    கோவை- 256
    கடலூர்- 54
    தருமபுரி- 7
    திண்டுக்கல் - 8
    ஈரோடு -1
    கள்ளக்குறிச்சி- 79
    காஞ்சிபுரம் - 239
    கன்னியாகுமரி - 16
    கரூர்- 4
    கிருஷ்ணகிரி- 12
    மதுரை- 679
    நாகப்பட்டினம் - 8
    நாமக்கல் - 1
    நீலகிரி - 9
    பெரம்பலூர்- 4
    புதுக்கோட்டை- 0
    ராமநாதபுரம்- 54
    ராணிப்பேட்டை- 96
    சேலம் -74
    சிவகங்கை - 32
    தென்காசி -0
    தஞ்சாவூர்- 30
    தேனி- 103
    திருப்பத்தூர்- 35
    திருவள்ளூர்- 450
    திருவண்ணாமலை- 139
    திருவாரூர் -46
    தூத்துக்குடி- 84
    நெல்லை- 101
    திருப்பூர்- 7
    திருச்சி -47
    வேலூர்- 246
    விழுப்புரம்- 120
    விருதுநகர்- 61
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்    8
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)    3
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்    0 
Tags:    

Similar News