செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

பத்திரிகையாளர் ராஜன் மறைவுக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல்

Published On 2020-07-15 11:13 GMT   |   Update On 2020-07-15 11:13 GMT
மாலைத் தமிழகம் நாளிதழ் செய்தியாளர் ராஜன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மாலைத் தமிழகம் நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் பி.ராஜன் (வயது 64) மாரடைப்பால் காலமானார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கோடைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்.  கிட்டத்தட்ட பத்திரிகை துறையில் 40 வருஷங்களுக்கு மேல் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு பணியாற்றி வந்த ராஜன் மாரடைப்பால் காலமானார்.  

நமது எம்ஜிஆர், மாலை தமிழகம், தமிழ் ஒளி போன்ற துறையில் பணியாற்றி சிறப்பு பெற்றவர் இவர்.  காகிதம் என்ற அமைப்பை நடத்தி வந்த இவர், நாளடைவில் காகிதம் ராஜன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்
.   பத்திரிகையாளர் பி.ராஜன் இறப்பு தமிழக பத்திரிகையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மறைந்த ராஜனுக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். அன்னாரது மறைவுக்கு பத்திரிகையாளர், அரசியல் கட்சியினர் பலரும் தங்களது அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாலைத் தமிழகம் நாளிதழ் செய்தியாளர் பெ.ராஜன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.  மேலும் அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், பத்திரிகை துறை நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  மறைந்த மாலைத் தமிழகம் நாளிதழ் செய்தியாளர் ராஜன் குடும்பத்தினருக்கு அரசின் விதிகளுக்கு உட்பட்டு நிதியுதவி வழங்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News