செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-07-14 14:12 GMT   |   Update On 2020-07-14 14:12 GMT
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,467, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேர் உட்பட 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798ல் இருந்து 1,47,324 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 89,834 ஆண்கள், 57,467 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 47,912 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் 11வது நாளாக 2 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னையில் இன்று 1,078 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இதனால் பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 78,573லிருந்து 79,662 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 4,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  92,567ல் இருந்து 97,310 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் 67 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 50 பேர், தனியார் மருத்துவமனையில் 17 பேர் என கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது.
Tags:    

Similar News