செய்திகள்
சென்னை தலைமைச் செயலகம்

முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

Published On 2020-07-14 11:53 GMT   |   Update On 2020-07-14 11:53 GMT
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  கொரோனா தொற்று பரவல் சவாலாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கியது.

தற்போது நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு பணி குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரியநிலையில் அது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆன்லைன் மூலம் உயர்கல்வி சேர்க்கை உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோகிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவதால் அவர்கள் பங்கேற்கவில்லை.  மேலும் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் சி.வி.சண்முகம் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.  
Tags:    

Similar News