செய்திகள்
மலைப்பாம்பு குட்டி

திருப்பத்தூர் அருகே பனை மர துவாரத்தில் 17 மலைப்பாம்பு குட்டிகள்

Published On 2020-07-14 10:52 GMT   |   Update On 2020-07-14 10:52 GMT
திருப்பத்தூர் அருகே பனை மர துவாரத்தில் 17 மலைப்பாம்பு குட்டிகளை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிரான்மலை, சிங்கம்புணரி, வயிரவன்பட்டி, கீழச்சிவல்பட்டி காட்டுப்பகுதிகளில் மலைப்பாம்புகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் கீழச்சிவல்பட்டி அருகே அச்சரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டுத் தோட்டத்தில் உள்ள பனைமர துவாரத்தில் ஏராளமான மலைப்பாம்பு குட்டிகள் இருப்பதை கண்ட கிராமத்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, மர துவாரத்தில் இருந்த பாம்புக்குட்டிகளை ஒவ்வொன்றாக மீட்டனர். மொத்தம் 17 குட்டிகள் இருந்தன. அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு குட்டிகள் மண்மலைக்காடு வனப்பகுதியில் விடப்பட்டன.

Tags:    

Similar News