செய்திகள்
கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்த காட்சி

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் வழங்கப்படும் உணவுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2020-07-14 10:40 GMT   |   Update On 2020-07-14 10:40 GMT
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கலெக்டர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கலெக்டர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு தினமும் காலை 6.30 மணிக்கு டீ, 8 மணிக்கு 3 இட்லி, சாம்பார் மற்றும் கபசுர குடிநீர், 10 மணிக்கு ரொட்டி, பால், 2 வாழைப்பழங்கள், 11 மணிக்கு கபசுர குடிநீர் அல்லது நெல்லிக்காய் ஜூஸ், கிரீன் டீ(ஏதேனும் ஒன்று) வழங்கப்படுகிறது. மதியம் 1 மணிக்கு மதிய சாப்பாடு, 2 முட்டைகள், பொறியல், கீரை சாம்பார் மற்றும் மோர், மாலை 3 மணிக்கு கபசுர குடிநீர், மாலை 4 மணிக்கு டீ சுண்டல், ராகி கொழுக்கட்டை மற்றும் பச்சைப்பயிறு, இரவு 7 மணிக்கு கிச்சடி மற்றும் சப்பாத்தி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உணவுகளை நேரில் பார்வையிட்டதோடு, சமையலறையில் உணவு தயாரிக்கும் முறையினை நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சுடுதண்ணீர் அவசியம் என்பதால், அவர்களுக்கு முதற்கட்டமாக 85 சுடுநீர் குடுவைகளை கலெக்டர்வழங்கினார். ஆய்வின் போது மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொறுப்பு) டாக்டர் மருததுரை மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News