செய்திகள்
கபசுர குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்கும் பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2020-07-12 10:13 GMT   |   Update On 2020-07-12 10:13 GMT
கரூர் மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்:

கரூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்களின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வீடு, வீடாக சென்று வழங்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கபசுர குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கரூர் நகராட்சி, குளித்தலை நகராட்சி மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்களுக்கு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் சித்த மருத்துவ அலுவலர்களின் அறிவுரையின்படி வழங்கப்பட உள்ளது. இப்பணியில் 520 அரசு பணியாளர்களும், 490 தன்னார்வலர்களும் என மொத்தம் 1,010 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்றார்.
Tags:    

Similar News