செய்திகள்
தமிழக அரசு

மதுரை மாநகராட்சியில் மேலும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு

Published On 2020-07-12 08:51 GMT   |   Update On 2020-07-12 08:51 GMT
மதுரை மாநகராட்சியில் மேலும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,077 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் இன்று நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் மேலும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 14.07.2020 நள்ளிரவு 12.00. மணி முடிய முழு ஊரடங்கு நீட்டிப்படுகிறது.

மேலும் 14-ந்தேதிக்கு பிறகு 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  
Tags:    

Similar News