செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வரும் 14-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

Published On 2020-07-11 08:08 GMT   |   Update On 2020-07-11 08:08 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ந்தேதி நடைபெறுகிறது.
சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ந்தேதி நடைபெறுகிறது.

தலைமை செயலகத்தில் வரும் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News