செய்திகள்
ரேசன் அரிசி பறிமுதல்

மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2020-07-10 15:57 GMT   |   Update On 2020-07-10 15:59 GMT
வானூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 850 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று காலை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனி தாசில்தார் உஷா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வானூர் அருகே தேற்குணம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஜெயமூர்த்தி (வயது 48) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் தலா 50 கிலோ எடை கொண்ட 17 மூட்டைகளில் 850 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ஜெயமூர்த்தி வானூர் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதனை தன்னுடைய மளிகை கடையில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, ஜெயமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News