செய்திகள்
முகக்கவசம்

சேலம் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.81¼ லட்சம் அபராதம்

Published On 2020-07-10 09:16 GMT   |   Update On 2020-07-10 09:16 GMT
சேலம் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.81 லட்சத்து 28 ஆயிரத்து 105 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி முக கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அதே நபர் 2-வது தடவை வந்தால் ரூ.500 அபராதமும், 3-வது தடவை வந்தால் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.76 லட்சத்து 79 ஆயிரத்து 445-ம், நகராட்சி பகுதிகளில் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 900-ம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 660-ம், ஊராட்சி பகுதிகளில் ரூ.13 ஆயிரத்து 100-ம் என மொத்தம் ரூ.81 லட்சத்து 28 ஆயிரத்து 105 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் மற்றும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 34 நபர்களும் என மொத்தம் 66 பேர் பூர்ண குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News