செய்திகள்
சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

Published On 2020-07-10 08:43 GMT   |   Update On 2020-07-10 08:43 GMT
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை போலீசார் மே மாதம் கைது செய்தனர். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் திருத்தணிகாசலம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. 

அத்துடன், அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் குண்டர் சட்டத்தை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்டவை நிலுவையில் உள்ளதால் அவரால் வெளியே வர முடியாது.
Tags:    

Similar News