செய்திகள்
போலீசார் யோகா பயிற்சி

தேனி ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி

Published On 2020-07-09 15:02 GMT   |   Update On 2020-07-09 15:02 GMT
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் ஆயுதப்படை போலீஸ் கவாத்து மைதானத்தில் நேற்று போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி:

தேனி மாவட்டத்தில் போலீசார் உடல் நலத்தை பேணி காக்கவும், மன அழுத்தத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் ஏதுவாக ஆயுதப்படை போலீஸ் கவாத்து மைதானத்தில் நேற்று போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 250 போலீசார் சமூக இடைவெளியுடன் அமர்ந்து பயிற்சி பெற்றனர். தேனியை சேர்ந்த யோகா பயிற்சியாளர் முத்தையா பயிற்சி அளித்தார். பயிற்சியில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜுகுமார், வாகன பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள போலீஸ் உட்கோட்ட அளவிலும் யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News