செய்திகள்
மாநில மனித உரிமைகள் ஆணையம்

சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பாடு என்ன? -மனித உரிமை ஆணையம் கேள்வி

Published On 2020-07-07 09:41 GMT   |   Update On 2020-07-07 09:41 GMT
சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பாடு குறித்து பதிலளிக்கும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தந்தை, மகன் காவல்நிலையத்தில் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் படையினரும் உடன் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் படைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறதா? என்றும், சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பாடு என்ன? என்றும் மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

இதற்கு 4 வாரத்தில் பதிலளிக்கும்படி டி.ஜி.பிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags:    

Similar News