செய்திகள்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட காட்சி.

விழுப்புரத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

Published On 2020-07-07 07:59 GMT   |   Update On 2020-07-07 07:59 GMT
விழுப்புரத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தீயணைப்புத்துறை சார்பில் மக்கள் கூடும் இடங்களிலும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள், ஊழியர்கள் வந்து செல்கின்றனர். வாரந்தோறும் இந்த அலுவலக வளாகத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின்கேஸ்ட்ரோ மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பெருந்திட்ட வளாகம் முழுவதையும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

இதேபோல் விழுப்புரம் நகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தினமும் காலை மற்றும் மாலையில் கிருமி நாசினி தெளிக்க நகராட்சிக்கு உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி சார்பில் ஊழியர்கள் டிராக்டரில் வீதி, வீதியாக சென்று கிருமிநாசினி தெளித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News