செய்திகள்
சென்னை மண்டலம்

சென்னை மண்டலத்திற்குள் வாடகை வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

Published On 2020-07-04 15:16 GMT   |   Update On 2020-07-04 15:16 GMT
சென்னை மண்டலத்திற்குள் ஜூலை 6 முதல் வாடகை வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சென்னைக்கு ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் எல்லைக்குள் ஜூலை 6 முதல் வாடகை வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் ஜூலை 6 முதல் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும் என்றும் வாகனங்களில் போலி இ-பாஸ் பயன்படுத்துவதாக தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News